சூடான செய்திகள் 1

ராஜேந்திரன் அப்துல்லாவிடம் வாக்குமூலம் பதிவுசெய்ய நீதிமன்றம் அனுமதி

(UTV|COLOMBO) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலையின் ஊழியரான கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லாவிடம் வாக்குமூலம் பதிவுசெய்வதற்கு, பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன் இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் 14, 15ஆம் திகதிகளில் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு, சிறைச்சாலைகள் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை பிரதேசத்திலுள்ள விடுதியொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களை விசாரித்து வாக்குமூலம் பெற வேண்டும் என பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்திருந்ததை கவனத்தில் எடுத்த, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

 

 

Related posts

பஸ் கட்டணம் குறைக்கப்படுமா?

மேலும் 2 பேர் பூரணமாக குணமடைந்தனர்

2016 ஆம் ஆண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு