உள்நாடு

ராஜிதவுக்கு கொவிட் தொற்று உறுதி

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனையின் போது கொவிட் தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, வைத்தியர் ராஜித சேனாரத்ன வீட்டிலேயே தன்னை சுயதனிமைப்படுத்திக் கொண்டுள்ளதுடன், மருத்துவ கண்காணிப்பின் கீழ் அவருக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக அவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்கள் பலர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பேரணி – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மின் கட்டணம் குறைப்பு – நாளை முதல் அமுல்.

ஊரடங்கு தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம்