கிசு கிசு

ராஜபக்சர்களின் அழிவு காலம் தொடர்கிறது

(UTV | கொழும்பு) –  அரசாங்கத்தின் மீதான மக்களின் எதிர்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இந்த நிலைமையில் ராஜபக்ஷ குடும்ப ஆட்சி முடிவுக்கு வரும் காலம் வெகுதொலைவில் இல்லை என கொழும்பு அபயாராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் நாளுக்கு நாள் மக்களை கோபத்திற்கே தள்ளிக்கொண்டு போகின்றது என்று அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

காலஞ்சென்ற மாதுலுபாவே சோபித தேரர், நாட்டின் அதிகாரங்கள் தனிநபர் ஒருவரின் கரங்களில் குவிக்கப்படக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தாக ஞாபகப்படுத்திய முருத்தெட்டுவே தேரர், அவ்வாறாக அதிகாரங்களை தனிமனிதனிடம் வழங்கும் போது என்ன நடக்கும் என்ற நிலைமையை தற்போது புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை எரிபொருள் அதிகரிப்பை தடுப்பதற்கு பயன்படுத்தியிருக்கலாம் என்றும், அவ்வாறு செய்திருந்தாலே அவர் நிறைவேற்று ஜனாதிபதியாவார் என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

“இன்றும் பொதுத்தேர்தல் நடந்தால் நாம் வெற்றி பெறுவோம்”

தற்கொலைக்கு முயன்றாரா மைக்கேல் ஜாக்சன் மகள்? இதுதான் காரணமா?

பசில் ராஜபக்ஷவுக்கு அமைச்சர் பதவி