கேளிக்கை

ரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்…

(UTV|INDIA)-பிரபல அமெரிக்க ஊடகமான தி ஹாலிவுட் ரிபோர்ட்டர் குழுமத்தின் `பில்போர்ட்’ உலக அளவில் இசை தொடர்பான செய்திகளுக்கு புகழ்பெற்றது. சர்வதேச அளவில் ரேடியோ, ஆன்லைன் ஆல்பங்கள், யூடியூப் என வெவ்வேறு ஊடகங்களில் டாப் இடம்பிடித்த பாடல்களின் தரவரிசைப் பட்டியலை வாரந்தோறும் வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் யூடியூப்பில் வெளிவந்த வீடியோ பாடல்கள் தரவரிசையில் யுவன் சங்கர் ராஜா இசையில் கடந்த 21ந் தேதி வெளியான `மாரி 2’ படத்தில் இடம்பெற்ற `ரவுடிபேபி’ பாடல் பில்போர்டின் டாப் ஐந்து பாடல்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது. கடைசியாக. தனுஷ் – அனிருத் காம்போவின் கொலவெறி பாடலின் மேக்கிங் வீடியோ பில் போர்டில் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
பில்போர்டின் இந்த வரிசையில் இடம்பெறும் முதல் தமிழ் வீடியோ பாடல் ‘ரவுடி பேபி’ என்பது குறிப்பிடத்தக்கது. பாடகி தீ உடன் தனுஷ் எழுதிப் பாடிய இந்தப் பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். இந்த பாடலின் வீடியோ சென்ற வாரம் யூடியூபில் வெளியானது. வெளியான ஒரே நாளில் 7 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற இப்பாடல் 8 கோடி வியூவ்ஸ் தாண்டி யூடியூப்பைக் கலக்கி வருகிறது.

Related posts

“சின்ட்ரல்லா”படத்தில் ராய் லட்சுமி

சிங்கத்தை வேட்டையாடி புகைப்படம் எடுத்துக் கொண்ட இளம்ஜோடி (video)

எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரூ.200 கோடி வசூலை நெருங்கும் பத்மாவத்