சூடான செய்திகள் 1

ரயில் ஊழியர்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO) – ரயில் தொழிற்சங்கங்கள் நேற்று(03) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மதுபோதையில் சேவையிலிருந்த ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் தொடருந்து பொது முகாமையாளருக்கு, போக்குவரத்து அமைச்சிலிருந்து கொடுக்கப்படும் அழுத்தத்தை தவிர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாத காரணத்தினால் இந்தப் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுவதாக ரயில் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று(04) எவ்வித அலுவலக புகையிரதங்களும் சேவையில் ஈடுபடாது புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

ரணில் – சஜித் நாளை கலந்துரையாடல்

சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் வெளிநாட்டவர் கைது

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவுக்கான நடைமுறைகள் நிறுத்தம்