உள்நாடு

ரஞ்சன் ராமநாயக்க இன்று நீதிமன்ற முன்னிலையில்

(UTV|NUGEGODA) – கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று(05) நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் பெறப்பட்ட சோதனை உத்தரவிற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெலவிலுள்ள அவரின் உத்தியோகபூர்வ வீடு நேற்று(04) மாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் ரஞ்சன் ராமநாயக்க, நேற்றிரவு (04) கைது செய்யப்பட்டார்.

கொழும்பு தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி மற்றும் அதற்காகப் பயன்படுத்தப்படும் 9 MM ரக 127 ரவைகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான சில ஆவணங்கள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிங்கள – முஸ்லிம் மக்கள் மத்தியில் நல்லுறவைப் பேணுவதற்கு பாலமாகச் செயற்பட்ட அலவியின் மறைவு கவலை தருகிறது-ரிஷாட்

பொலிஸ் உத்தியோகத்தர்களினது விடுமுறைகள் இரத்து

நீதிமன்ற செயற்பாடுகள் நாளை மீளவும் ஆரம்பம்