உள்நாடு

ரஞ்சன் தொலைபேசி உரையாடல்; ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும்

(UTVNEWS | COLOMBO) -பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி கலந்துரையாடல்கள் பற்றி விசாரிப்பதற்கான ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு செயற்படுவதன் காரணமாக நீதிமன்றத்தின் மீதான நல்லெண்ணத்திற்கு அவப்பெயர் ஏற்படக்கூடும், குற்றமிழைத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது அவசியமாகும் என்று அவர் கூறினார்.

அத்துடன் தபால் திணைக்களத்தை வினைத்திறன்மிக்கதாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும், முன்மாதிரியான தபால் நிலையங்கள் பல விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வெளிநாடு செல்ல தடை

editor

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்கள்

தோட்ட தொழிலாளர்கள் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!