உள்நாடு

ரஞ்சன் இன்று நீதிமன்ற முன்னிலையில்

(UTV|கொழும்பு) – கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று(15) நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

நுகேகொட நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவிற்கு அமைய, ரஞ்சன் ராமநாயக்க நேற்று(14) மாலை 6.15 அளவில் மாதிவல பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

நீதிபதிகளின் நடவடிக்கைகளில் தலையிட்டமை மற்றும் அச்சுறுத்திய குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரின் உத்தரவிற்கு அமையவே ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சி.ஐ.டி. பொறுப்பின் கீழ் உள்ள யானைகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க உத்தரவு

புதிய கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த நியமனம்

கொழும்பிற்குள் விசேட அம்பியுலன்ஸ் சேவை