சூடான செய்திகள் 1

ரங்கே பண்டாரவின் மகன் செலுத்திய வாகனம் விபத்து

(UTV|COLOMBO)-இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார செலுத்திய கெப் வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் யசோத ரங்கே பண்டார உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கெப் வண்டி இன்று அதிகாலை 12.45 அளவில் புத்தளம் ஆராச்சிக்கட்டுப் பகுதியி்ல் மதிலொன்றை உடைத்துக் கொண்டு வீடொன்றுக்குள் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் சிகிச்சைகளை பெற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். எனினும் யசோத ரங்கே பண்டார உள்ளிட்ட இருவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக பொலிஸார் கூறினர்.

விபத்து இடம்பெற்ற போது இராஜாங்க அமைச்சரின் மகன் மதுபோதையில் இருந்தாரா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அர்ஜுன் மகேந்திரனுக்கு வழங்கப்பட்ட காலவகாசம் நேற்றுடன் நிறைவு

அதிவேக வீதியின் இருமருங்கிலும், மரங்களை வளர்க்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை உயர்வு