கேளிக்கை

ரகுல் ப்ரீத் சிங் உடல் உறுப்பு தானம்

(UTV|INDIA)-புத்தகம், தடையற தாக்க, தீரன், என்னமோ ஏதோ படங்களுக்கு பிறகு ஸ்பைடர் படம் மூலம் தமிழில் ரீஎன்ட்ரி ஆன ரகுல் ப்ரீத் சிங்கிற்கு வெற்றிகளமாக அமைந்தது, தீரன் அதிகாரம் ஒன்று. இப்படத்தில் கார்த்தியுடன் ஜோடிபோட்டவர் அடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேர்கிறார். ரகுல் தனது உறுப்புகளை தானம் செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியது: உடல் உறுப்புதானம் பற்றிய கட்டுக்கதைகளிலிருந்து ஒவ்வொருவரும் ஒதுங்கி நிற்க வேண்டும்.

உறுப்புதானம் என்ற உன்னதமான பணியில் தங்களை இணைத்துக் கொண்டு உயிர்களை காப்பாற்ற முன்வரவேண்டும். உறுப்பு தானம் செய்வதன் மூலம் ஒருவரால் 8 உயிர்களை காக்க முடியும். மேலும் 50 பேருக்கு நல்வாழ்வு அளிக்க முடியும்’ என்றார். உறுப்புதானம் செய்ததன் மூலம் கமல்ஹாசன், மணிரத்னம், சமந்தா போன்றவர்களின் பட்டியலில் இணைந்திருக்கிறார் ரகுல்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

“மதத்தை என்னில் திணிக்க வேண்டாம்”

சினிமாவுக்காக நடிகைகள் திருமணத்தை தள்ளிப்போடக் கூடாது

இலங்கைத் தமிழர் ஸ்ரீநாத் இயக்கத்தில் “அன்புள்ள கில்லி” [VIDEO]