கேளிக்கை

யோகிபாபுவுடன் இணையும் ஜனனி ஐயர்

(UTV|INDIA) யோகிபாபு நடிக்கும் தர்மபிரபு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜனனி ஐயர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் யோகி பாபு. அவரது காமெடிக் காட்சிகளுக்கு தியேட்டரே அதிர்கிறது. இந்நிலையில் யோகிபாபு தற்போது சில படங்களில் முதன்மை வேடங்களில் நடித்துவருகிறார். சாம் ஆண்டன் இயக்கத்தில் அவர் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘கூர்கா’ படத்தின் படப்பிடிப்பு நேற்றோடு நிறைவடைந்தது.

இதனையடுத்து அவர் ‘தர்மபிரபு’ என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை விமல் – வரலக்ஷ்மி நடித்துள்ள ‘கன்னிராசி’ படத்தின் இயக்குநர் முத்துகுமரன் இயக்குகிறார். இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்துக்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் ஜனனி ஐயர் சிறப்பு வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

ஆப்கானின் பிரபல நகைச்சுவை நடிகர் கொலை

அருண் விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் சந்தானம்

ஹிந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷை நீக்கி பிரபல நடிகை ஒப்பந்தம்