உள்நாடு

யுகதனவி ஒப்பந்தம் – இரண்டாவது நாள் விசாரணைகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றும் தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (16) இரண்டாவது நாளாகவும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரீ.பீ தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் (16) ஐவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், விசாரணைகள் இன்று (17) காலை 10 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முதன் முதலாக யாழ்ப்பாணம் சென்ற ஆதிவாசிகள்!

ஐந்தாவது தேசிய இளைஞர் பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு இன்று!

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் இருவருக்கு விளக்கமறியல்!