உள்நாடுவகைப்படுத்தப்படாத

யாழ் பல்கலைக்கழக மாணவி திடீர் மரணம்

(UTV | கொழும்பு) – 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

குணரத்தினம் சுபீனா என்ற 25 வயது மதிக்கத்தக்க மாணவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்று வந்த குறித்த மாணவி காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விரைவில் தீவிர பொருளாதார மந்தநிலை : உலக வங்கி எச்சரிக்கை

டிரம்ப் ஜூனியரை விவாகரத்து செய்தார் மனைவி

இன்று முதல் மின்வெட்டு