சூடான செய்திகள் 1

யாழ் சர்வதேச விமான நிலையம் திறப்பு [UPDATE]

(UTV|COLOMBO) – யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சற்று ​முன்னர் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு அதிதிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

————————————————————————————-(UPDATE)

யாழ் சர்வதேச விமான நிலையம் இன்று திறப்பு

(UTV|COLOMBO) – யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(17) உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளது.

இன்று(17) காலை 10 மணிக்கு இதற்கான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்ட பலாலி விமான நிலையம் யாழ். நகரிலிருந்து 20 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.

இன்றைய தினம் சென்னையிலிருந்து பயணிகள் விமானம் ஒன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேரடி விமான சேவைகளும் இந்திய பிராந்திய விமான நிலையங்களான சென்னை, திருச்சி மற்றும் கொச்சியிலிருந்து யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி விமான சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திலிருந்து நாளாந்த விமான நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

தாதியர்கள் இன்று எதிர்ப்பு பேரணி

‘டிகிரி சக்தி’ பிஸ்கட் வழங்கும் திட்டத்தின் கீழ் தோட்டசிறார்களுக்கு பிஸ்கட்

ஜனாதிபதி தேர்தல் ; சுதந்திர கட்சியின் இறுதி தீர்மானம் இன்று