உள்நாடு

யாழ் இன்று முற்றாக முடங்கியது

(UTV | யாழ்ப்பாணம்) – ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இன்று வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலிற்கு யாழ்ப்பாணம் மக்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.

இன்றைய ஹர்த்தாலினால் யாழ். நகரம் முற்றாக முடங்கியது. யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன பொதுமக்கள் வீதிகளில் பயணிக்கவில்லை அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் இன்றைய தினம் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

10 தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து தற்போதைய அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழ் மக்கள் மீதான அடாவடித்தனத்திற்கு ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அந்த அழைப்பிற்கு தமிழ் மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கி தமது ஆதரவினை அளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

BREAKING NEWS – யோஷித ராஜபக்ஷ விளக்கமறியலில்

editor

இலங்கை கிரிக்கெட் இன் செயலாளர் இராஜினாமா

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை