சூடான செய்திகள் 1

யாழில் கைப்பற்றப்பட்ட 7 ஆயிரத்து 420 லீற்றர் எதனோல்

(UTV|JAFFNA)-யாழில் ரோந்தில் ஈடுபட்டு வருகின்ற விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையில், இலங்கையில் தடை செய்யப்பட்ட பெருமளவிலான எதனோல் போதைப் பொருள் பாரவூர்தியில் கடத்திச் செல்லப்பட்ட போது விசேட அதிரடிப்படையினரால் இன்று(24) கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் போது பாரவூர்தி ஒன்றுடன் 372 எதனோல் அடைக்கப்பட்ட கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஒவ்வாரு கொள்கலன்களும் 21 லீற்றர் கொள்ளளவைக் கொண்டவை என்பதுடன் மொத்மாக 7,420 லீற்றர் எதனோல் மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பாராவுர்தியுடன் கைப்பற்றப்பட்ட எதனோல் போதைப் பொருளை சுன்னாகம் காவற்துறையிடம் இன்று(24) விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களையும் நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

Related posts

மாகாண சபைத் தேர்தல் செப்டம்பர் 30ம் திகதிக்கு முன்னர்

கொரோனா வைரஸ் – நாட்டில் மேலும் 18 பேர் அடையாளம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்யக் கூடும்