உள்நாடு

யாழில் இடம்பெற்ற இந்திய குடியரசு தின விழா!

(UTV | கொழும்பு) –

இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்திலிலும் 75 ஆவது குடியரசு தின தேசியக் கொடியேற்றி வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மருதடி லேனில் உள்ள யாழ். இந்திய துணைத்தூதரகத்தில் யாழ்ப்பாணம் இந்திய உதவித் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்திய தேசிய கொடியினை எற்றிவைத்தார்.

இதனை தொடர்ந்து இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின வாழ்த்து செய்திகள் வாசிக்கப்பட்டதுடன், தமிழ் மொழியில் ஹிந்தி கற்று வரும் மாணவிகளின் நடனம் இடம்பெற்றதுடன், இந்திய காவற்படையின் வீரர் ஒருவரின் குடியரசு தின கவிதையும், மாணவியின் கவிதையும் இடம்பெற்றன.

இவ் நிகழ்வில் இந்திய உதவி தூதரக அதிகாரி ராம் மகேஸ், தூதரக அதிகாரிகள் குடும்ப உறவினர்கள், ஊடகவியாளர்கள், பொஸிஸார், இராணுவத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.

       

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அலரி மாளிக்கைக்கு அருகிலுள்ள வீதி திறப்பு

editor

பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானம்

சுமார் 52 கோடி மதிப்புள்ள கப்பல் வழக்கால் கடலில் அழுகுகிறது