உலகம்

யாரும் அமெரிக்கா நோக்கி வர வேண்டாம் : பைடன் திட்டவட்டம்

(UTV | அமெரிக்கா) – புலம்பெயர்ந்தோர் யாரும் அமெரிக்கா நோக்கி வர வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மெக்சிகோவில் இருந்து புலம்பெயர்ந்தோர் ஏராளமானோர் அமெரிக்க எல்லை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இதில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் யாருமில்லாமல் தனியாக வந்துகொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க எல்லை நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் மெக்சிகோவில் இருந்து வருவது குறித்து முறைப்பாடுகள் எழுந்த நிலையில், புலம்பெயர்ந்தொர் யாரும் வர வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், “புலம்பெயர்ந்தோர் யாரும் அமெரிக்கா நோக்கி வர வேண்டாம் என தெளிவாக கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஊர், நகரம், சமூகத்தை விட்டுவிட்டு வர வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

மெக்சிகோவில் இருந்து அமெரிக்கா நோக்கி வரும் புலம்பெயர்ந்தோர் குறித்து முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சற்று கடினமாக நடந்துகொண்டார். இப்போது ஜோ பைடன் ஆட்சியில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

எனினும், டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக் காலத்திலேயே 2019, 2020 ஆண்டுகளில் அமெரிக்கா நோக்கி வந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததாக ஜோ பைடன் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியா தேர்தலில்: பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் பின்னடைவு!

28 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்

ஜப்பானில் பயணத் தடை