சூடான செய்திகள் 1

மோப்பநாய்களுக்கு போதைப்பொருள் சுற்றிவளைப்பு பயிற்சி

(UTV|COLOMBO) கொக்கெய்ன், ​ஹெரோயின் ஆகிய போதைப்பொருள் கடத்தல்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகளுக்காக 70 பொலிஸ் மோப்பநாய்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் மோப்பநாய்கள் பிரிவில் 222 நாய்கள் காணப்படுவதுடன் அவற்றில் 70 நாய்களே, போதைப்பொருள் கடத்தலை சுற்றிவளைப்பதற்காக பயிற்றுவிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 60 நாய்கள் வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு, விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகங்களில் பொலிஸ் மோப்பநாய்களின் பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் இரகசியமாக நாட்டிற்குக் கொண்டுவரப்படும் போதைப்பொருளை கைப்பற்றுவதற்கு இயலும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

மேலதிக வகுப்புக்கள் நடத்துவதை நிறுத்த கோரிக்கை

கஞ்சிப்பானை இம்ரானை 09 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு

(UPDATE) நாடளாவிய வெடிப்புச் சம்பவங்களில் இதுவரையில் பலியானோரின் எண்ணிக்கை