உள்நாடு

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  சாரதி அனுமதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகு காலம் தொடர்பில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் எதிர்வரும் செப்டெம்பர் 30 ஆம் வரையான காலப்பகுதிக்கு காலாவதியாகும் சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இக்காலப்பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களை அவை காலாவதியான திகதியிலிருந்து மேலும் 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

நோயாளர்களுக்கும் வைத்தியர்களுக்கும் இடையில் புதிய சேவை அறிமுகம்

திருகோணமலை எண்ணெய் தாங்கி அபிவிருத்தி : ஒப்பந்தம் நாடாளுமன்றில் முன்வைப்பு

மாற்றம் கோரும் தேசிய மக்கள் சக்தி முதலில் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் – கிண்ணியாவில் ரிஷாட் எம்.பி

editor