உள்நாடு

மோட்டார் வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

(UTV|கொழும்பு) – மொறட்டுவ எகொட உயன பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றின் மீது நேற்றிரவு(02) பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் பொலிஸ் பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் வாகனத்தின் சாரதி உட்பட காயமடைமந்த 3 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இளைஞர்கள் பத்தரமுல்லை பெலவத்தை பகுதியைச்சேர்ந்தவர்கள் என மேலதிக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

Related posts

ரஞ்சன் உரையாடல்; பத்தேகம நீதவான் பணி இடைநீக்கம்

“சிறிய மாற்றங்களுடன் முச்சக்கர வண்டிகளை இயக்குவதற்கு நடவடிக்கை”

ஒரு நாள் சேவை நடவடிக்கை இடைநிறுத்தம்