உள்நாடு

மொரட்டுவை – சொய்சாபுர உணவக தாக்குதல் – சந்தேக நபருக்கு விளக்கமறியல்

(UTV | கொழும்பு) – மொரட்டுவை – சொய்சாபுர பகுதியில் உள்ள உணவகம் ஒன்றினை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரியவரை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மொரட்டுவ நீதவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த மாதம் 29 ஆம் திகதி குறித்த உணவகத்திற்கு துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரியவர் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என குறிப்பிடப்படுகிறது.

36 வயதுடைய சந்தேகத்திற்குரியவரை நேற்று முன்தினம் ரத்மலானை மகிந்த மாவத்தையில் போலீசார் கைது செய்திருந்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நுவரெலியாவில் இரு சிசுக்களின் சடலங்கள் மீட்பு

வெற்றிலைக்கேணி கடலில் ஒன்பதுபேரை கைது செய்த கடற்படை

ஜனாதிபதி தேர்தல் – ஆதரவுக் கணிப்பில் சஜித் பிரேமதாச முன்னணியில்