உள்நாடு

மேல் மாகாணத்தில் விசேட சோதனை

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுகின்றனரா என்பது தொடர்பில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையை நேற்று (26) முன்னெடுத்தனர்.

இந்த நடவடிக்கையில் 737 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, 3021 மோட்டார் சைக்கிள் மற்றும் 2493 முச்சக்கரவண்டிகள் சோதனையிடப்பட்டுள்ளதுடன், 7352 பேரும் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில், சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றாத 1749 பேருக்கு பொலிஸரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

ஒன்றிணைந்து செல்ல எங்களுக்கு கட்சி நிறம் தேவையில்லை – மனுஷ நாணயக்கார

கதிரை சின்னத்தில் களமிறங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நடவடிக்கை

editor

கண்டி எசல பெரஹராவுக்கான முகூர்த்த்கால் நடும் விழா இன்று