உள்நாடு

மேல் நீதிமன்ற நீதிபதி கிஹானிடம் 5 மணிநேர வாக்குமூலம் பதிவு

(UTV|கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடிய குரல் பதிவுகள் தொடர்பில் தற்போதைய எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

நீதிபதியிடம் நேற்று(19) 5 மணித்தியாலம் வரை வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக கொழும்பு குற்றவியல் பிரிவு தெரிவித்துள்ளது.

சட்டமா அதிபரின் உத்தரவிற்கமையவே நீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம் இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயகவுடன் சர்ச்சைக்குரிய வகையில் நீதிமன்ற செயற்பாடுகள் குறித்து உரையாற்றியமை தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

Related posts

தீப்பரவல் – வௌ்ளவத்தை பகுதியில் கடும் வாகன நெரிசல்

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 37 பேர் கைது

அரசாங்கத்திடம் ரிஷாட் விடுத்துள்ள கோரிக்கை