உலகம்

மேலும் 8 சீன செயலிகளுக்கு அமெரிக்கா தடை

(UTV |  அமெரிக்கா) – அமெரிக்கா தங்களின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி டிக் டாக் மற்றும் வீ சாட் ஆகிய சீன செயல்களுக்கு தடை விதித்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த மேலும் 8 சீன செயலிகளுக்கு தடை விதித்து ஜனாதிபதி டிரம்ப் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

இந்த செயலிகள் அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி சீன அரசுக்கு வழங்குவதாக அந்த தடை உத்தரவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.‌

இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-

நமது நாட்டின் தேசிய பாதுகாப்பை பாதுகாக்க வேண்டுமெனில் சீன தொடர்புடைய மென்பொருள் செயலிகளை உருவாக்குபவர்கள் அல்லது கட்டுப்படுத்துபவர்களுக்கு எதிராக நாம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, அலிபே, கேம்ஸ்கேனர், கியூ கியூ வாலட், ஷேர் இட், டென்சென்ட் கியூ கியூ, விமேட், வீ சாட் பே மற்றும் டபிள்யூ.பி.எஸ் அலுவலகம் ஆகிய 8 சீன செயலிகளுக்கு தடை விதிக்கபபடுகிறது. இத்தடை உத்தரவு அடுத்த 45 நாட்களில் நடைமுறைக்கு வரும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தின அனுஷ்டிப்பு

சித்தரவதை முகாமாக இருக்கும் குவான்தனாமோ சிறை

நேபாளத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம்

editor