உள்நாடு

அஸ்வெசும தொடர்பில் புதிய அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –

7 இலட்சம் அஸ்வெசும மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்த பின்னர், மேலும் 03 இலட்சம் குடும்பங்கள் புதிதாக அஸ்வெசும திட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளன.இதில் தகுதியற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 5,000 என பணவியல், பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பான 640,000 ஆட்சேபனைகள் மற்றும் மேன்முறையீடுகளை பரிசீலித்தன் பின்னர், புதிதாக 300,000 குடும்பங்கள் அஸ்வெசுமவில் இணைவதற்கு தகுதி பெற்றுள்ளதாக பதில் நிதியமைச்சர்  ஷெஹான் சேமசிங்க அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.அதன்படி அஸ்வெசும  பலன்களைப் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 17 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதிதாக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு அடுத்த தவணை தொகை வழங்கப்படுவதற்கு முன்னர், ஜூலை முதல் டிசம்பர் வரையிலான தவணைகள் விரைவில் வங்கிகளுக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் காரணமாக, இதுவரை நிவாரணம் பெற்றுக் கொண்டிருந்த 5,209 குடும்பங்கள் தகுதியற்றவர்களாகவும், மேலும் 2,567 குடும்பங்கள் தாங்கள் பெறும் சலுகைகளின் மட்டத்திலிருந்து கீழே சென்றுள்ளனர்.

மேலும் 50,882 பேர் தமது சலுகை மட்டத்தை உயர்த்தியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏறக்குறைய 11 இலட்சம் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவை விரைவில் பரிசீலித்து நிறைவு செய்யப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நிதியமைச்சில் இன்று  நலன்புரி நன்மைகள் சபையுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க இந்த விடயங்களை வெளிப்படுத்தினார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்பில் மற்றுமொரு பகுதிக்கு ஊரடங்கு அமுல்

பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய ஐக்கிய மக்கள் சக்தியால் மட்டுமே முடியும் – சஜித்

editor

வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பதவியை நிராகரித்த டி. வி. சானக்க