உள்நாடு

கம்பஹா மாவட்டத்தில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு

(UTV | கம்பஹா) – உடன் அமுலுக்கு வரும் வகையில் கம்பஹா மாவட்டத்தில் மேலும் 14 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரால் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, கம்பஹா, கிரிந்திவேல, தொம்பே , பூகோட , கணேமுல்ல, வீரகுல , வெலிவேரிய, மல்வதுஹிரிபிட்டிய, நிட்டம்புவ , மீரிகம, பல்லேவெல , யக்கல , ஜா-எல மற்றும் கந்தானை பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு  பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

திவுலபிட்டிய, மினுவங்கொட மற்றும் வெயங்கொட பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு தொடர்ந்து ஊடரங்கு சட்டம் அமுலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

புத்தாக்கங்களை ஊக்குவிக்க புதிய அரசாங்கத்தின் துரித வேலைத்திட்டம்

editor

பதில் பிரதமராக தினேஷ் குணவர்தனவை நியமிக்க பரிந்துரை

SJBயில் UNP காரர்கள் இல்லை: ரணில்