கிசு கிசு

மேலும் இரு மரணங்கள் : PCR முடிவுகள் பிற்பகலில் வெளியாகும்

(UTV | கொழும்பு) – கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்த இருவருக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரே உயிரிழந்துள்ளனர்.

நோய் நிலைமை காரணமாக இந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் உள்ள சுகாதார நிலைமை காரணமாக உயிரிழந்த இருவரினதும் சடலங்களில் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இவர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்களா என இன்று பிற்பகல் அறிந்து கொள்ள முடியும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புதிய Huawei கையடக்கத் தொலைபேசிகளில் பேஸ்புக் செயலி நீக்கம்?

பயணக்கட்டுப்பாடு தொடர்பிலான புதிய நடைமுறை

பெண்களுக்கான உள்ளாடைகளை சிறந்த முறையில் தைக்கும் நாடாக இலங்கை…