விளையாட்டு

மென்டிஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு

(UTVNEWS | COLOMBO) – இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஜந்த மென்டிஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இராணுவ விளையாட்டுக் கழகத்திலிருந்து சர்வதேச கிரிக்கெட் அரங்கிற்கு பிரவேசித்த மென்டிஸ், காலில் ஏற்பட்டிருந்த உபாதை காரணமாக கிரிக்கெட் விளையாட்டிலிருந்து நீண்ட காலமாக விலகியிருந்தார்.

19 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றியுள்ள மென்டிஸ் 70 விக்கெட்டுகளை பெற்றுக் கொண்டுள்ளதோடு 87 ஒரு நாள் போட்டிகளில் பங்குபற்றி 152 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இதுவரையில், 39 சர்வதேச டி20 போட்டிகளில் பங்குபற்றியுள்ள மென்டிஸ், 66 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இருபதுக்கு 20 தொடர் – இந்திய குழாம் அறிவிப்பு

நெய்மர் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாரா?

தொடரை கைப்பற்றியது இந்தியா அணி