வகைப்படுத்தப்படாத

மூன்று முறையில் சிறையிலிருந்து இரகசியமாக வெளியே சென்ற சசிகலா!

(UDHAYAM, COLOMBO) – கர்நாடகாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, மூன்று தடவைகள் சிறையிலிருந்து வெளியே சென்றுவிட்டு வந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சிறையில் உள்ள பெயர் குறிப்பிடாத சிறைகாவலர் ஒருவர் எழுதியுள்ள மொட்டை கடிதத்தில் இது குறித்து தகவல்கள் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை தலை சுற்றும் அளவுக்கு உள்ளதாம்.

சசிகலாவுக்கு ஏதாவது உதவிகள் சலுகைகள் செய்தால் சிறையில் வெள்ளை நிற துண்டு சீட்டு அளிக்கப்படும். அதனை வெளியில் உள்ள சசிகலாவின் உறவினரிடம் கொடுத்தால் பணம் கொடுப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

சிறைத்துறை உயர் அதிகாரி ஒருவரின் காரில் சிறையில் இருந்து முக்கால் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பிரிட்டானியா அடுக்குமாடி குடியிருப்புக்கு சசிகலா 3 முறை சென்று வந்துள்ளார் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

Related posts

வானுட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

AG calls for comprehensive report on Easter Sunday attacks

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இன்று அவசரமாக கூடுகிறது!