உள்நாடுவணிகம்

மூன்று மாதங்களுக்குள் 10,661 வாகனங்கள் புதிதாக பதிவு

(UTV | கொழும்பு) – 2021 இன் முதல் மூன்று மாதங்களுக்குள் 10,661 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் சுமித் அலககோன் தெரிவித்துள்ளார்.

அதன்படி ஜனவரியில் 3,350 வாகனங்களும், பெப்ரவரியில் 3,661 வாகனங்களும், மார்ச் மாதத்தில் 3,650 வாகனங்களும் புதிதாக பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவற்றில் மோட்டர் சைக்கிள்கள் தான் அதிகளவில் (3,525) புதிதாக பதிவுசெய்யப்பட்டுள்ளன.

அதேநேரம் இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட 196,937 வாகன உரிமையாளர் இடமாற்றங்கள் நடந்ததாகவும் மோட்டார் போக்குவரத்து ஆணையளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

சிங்கப்பூரில் இருந்த 291 பேர் நாடு திரும்பினர்

சர்வதேச மகளிர் தின நிகழ்வு

கொரோனா கண்டறிய Self Shield