சூடான செய்திகள் 1

மூன்று மாடி கட்டிடத்தில் தீ

(UTV|COLOMBO)-கருவாத்தோட்டம், ரோஸ்மிட் பகுதியில் உள்ள மூன்று மாடி கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள ஆடைத் தைக்கும் நிலையமொன்றில் இன்று அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருவாத்தோட்டம் பொலிஸார் மற்றும் கொழும்பு மா நகர சபையின் தீ அணைப்பு பிரிவினர் ஒன்றிணைந்து குறித்த தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீ ஏற்பட காரணம் மற்றும் குறித்த விபத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை

சம்பவம் தொடர்பில் கருவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

”பேச விரும்பினால் மட்டும் என்னுடன் பேசுங்கள்”- ரணில் சம்பந்தன் வாக்குவாதம்

ஸ்ரீ லங்கன் விமான சேவை தொடர்பிலான குழுவின் அறிக்கையானது இன்று(23) ஜனாதிபதிக்கு

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 30 நாட்களுக்குள் சம்பள உயர்வு – ஜீவன்