சூடான செய்திகள் 1

முஸ்லிம் பா.உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்க பிரதமர் கோரிக்கை

(UTVNEWS | COLOMBO) – இராஜினாமா செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் அமைச்சு பதவிகளை வழங்குமாறு ஜனாதிபதியிடம் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமரின் பணிப்புரைக்கு அமைய பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னர் நாட்டில் எழுந்த நெருக்கடி நிலைமையை அடுத்து அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சுகாதார அமைச்சர் கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தி கையெழுத்திட்டது.

சூரியன் இலங்கையில் உச்சம் கொடுக்கும் நாள் ஆரம்பம்…

உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 07ம் திகதி விசாரணைக்கு