உள்நாடு

முஸாதிக்காவின் வீட்டிற்கு சென்று பாராட்டிய பௌத்த மதகுரு

(UTV|திருகோணமலை) – கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்று பௌத்த மதகுரு பாராட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கல்வி பொதுத்தராதர உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் திருகோணமலை மாவட்டத்தில் முதலாம் இடம்பெற்று வைத்திய துறைக்கு தெரிவான மூதூரை சேர்ந்த மீராசா பாத்திமா முஸாதிக்காவின் வீட்டிற்கு மொறவெவ பிரதேச சபையின் தவிசாளரும் திருகோணமலை தெவனிபியவர இந்ரா ராம ரஜமஹா விகாரையின் விகாராதிபதியுமான பொல்ஹேன்கொட உபரத்ன தேரர் நேற்று விஜயம் செய்தார்.

மேலும் அந்த மாணவியின் படிப்புக்கு தான் உதவி செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி கெரவலப்பிட்டியவிற்கு திடீர் விஜயம்

இன்று மற்றும் நாளை ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை

ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு; நாட்டில் வெள்ளம் ஏற்படும் அபாயம்