உள்நாடு

முல்லைத்தீவில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிர்மாய்ப்பு!

(UTV | கொழும்பு) –

முல்லைத்தீவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையத்தில் நிர்வாக பிரிவில் சாஜனாக கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விளையாட்டு மைதானத்திற்கு பின்பாக பொலிஸ் நிலையத்திற்கென புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டட வளாகத்திலுள்ள குளியல் அறையில் தூக்கில் தாெங்கிய நிலையில் நேற்றைய தினம் மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்தில் அம்பாறையை சேர்ந்த இராமநாதன் சத்தியநாதன் எனும் 35 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். குறித்த பொலிஸாரின் இறப்புக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்டாத நிலையில் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்ற னர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேலதிக உதவிகளைப் பெற IMF மற்றும் உலக வங்கியுடன் பேச்சு

கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறினார்

கொழும்பில் ஏற்படப்போகும் மாற்றம்