சூடான செய்திகள் 1

முல்லைத்தீவில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி: நால்வர் படுகாயம்

(UTV|COLOMBO)-முல்லைத்தீவு – நெடுங்கேணி – முல்லியவலை வீதியில் இராணுவ வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரண்டு அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

இன்று பிற்பகல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்துள்ளவர்கள் இராணுவ மேஜர் ஒருவரும், இராணுவ அதிகாரியொருவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் காயமடைந்த மேலும் நான்கு பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

20க்கு எதிரான கம்மன்பிலவின் மனு இன்று விசாரணைக்கு

இரத்த நன்கொடையாளர்களுக்கு இரத்த வங்கி அழைப்பு

7000 சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு இன்று நிரந்தர நியமனம்