கிசு கிசுவிளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் கிரன் பொலார்டுக்கு விதிக்கபட்ட அபராதம்…

(UTV|INDIA)  ஐ.பி.எல். கிரிக்கட் தொடரின் இறுதி போட்டி நேற்று இடம்பெற்றிருந்த நிலையில், போட்டி நடுவர் வழங்கிய தீர்ப்புகளுக்கு எதிராக அவர் செயற்பட்ட விதத்தை கண்டிக்கும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் கிரன் பொலார்டுக்கு போட்டிப் பணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கட் விதிகளின் அடிப்படையில் முதலாம் அடுக்கு குற்றச்சாட்டை பொலார்ட் ஏற்றுக் கொண்டுள்ளார் என, ஐ.பி.எல் நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்வைன் ப்ராவோ வீசிய பந்து , அகலப்பந்து என பொலார்ட் கருதிய போதும், நடுவரின் தீர்மானம் அதற்கு மாறாக இருந்தமையால், பொலார்ட் களத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.

Related posts

ஆசிய கிண்ணத்திற்கு இலங்கை அணியின் முதல்கட்ட குழாம் அறிவிப்பு…

660 ஓட்டங்களை பெற்று வெற்றி வாகை சூடுமா?

IPL முதல் போட்டியில் வென்ற ரோயல் செலஞ்சர்ஸ்