வகைப்படுத்தப்படாத

மும்பையில் கடும் மழை நீடிப்பு

(UTV|INDIA)-மும்பையில் கடும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், புகையிரத நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் பயணிகளை மீட்கும் பணியில் கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கடும் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மும்பை, அதன் புறநகர் பகுதிகளில் நெடுஞ்சாலைகள், தெருக்கள், குடியிருப்பு பகுதிகள், புகையிரத நிலையங்கள், உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து முடங்கியுள்ளது.

புகையிரத தண்டவாளத்தில் மழைநீர் 2 மீட்டர் உயரத்திற்கு தேங்கியதால் சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் வதோதரா எக்ஸ்பிரஸ் புகையிரதங்கள் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்டுகின்றது.

இந்நிலையில், நாலா சோபாரா ரெயில் நிலையத்தில் ஆளுயரத்திற்கு மழை நீர் தேங்கியிருப்பதால் குறித்த அந்த புகையிரத நிலையங்களில் இருக்கும் பயணிகள் வெளியேற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

St. Peter’s rout Kingswood 53-12

EU to take migrants from Alan Kurdi rescue ship

இலங்கையின் முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி நிலையம்