உள்நாடு

முன்னாள் பிரதமருக்கு அழைப்பு

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் எதிர்வரும் 25 ஆம் திகதி முன்னிலையாகுமாறு ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்னதாக அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளின் நிமித்தம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

“ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல்”

குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டண திருத்தம் இன்று முதல் அமுலுக்கு

ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று