அரசியல்உள்நாடு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சி.ஐ.டியிலிருந்து வெளியேறினார்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று புதன்கிழமை (09) காலை ஆஜராகியிருந்தார்.

இதன்போது, கெஹலிய ரம்புக்வெல்லவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல்ல, தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2024 ஆம் ஆண்டு பெப்பரவரி மாதம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 7 மாதங்களுக்கு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புரெவி சூறாவளி – 200 மி.மீ. வரையான பலத்த மழைவீழ்ச்சி

கொழும்பில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தல்

ரணிலுக்கு நாமல் விடுத்துள்ள எச்சரிக்கை