சூடான செய்திகள் 1

UPDATE முன்னாள் கடற்படை தளபதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்

(UTV|COLOMBO) முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, வாக்கு மூலம் ஒன்றை வழங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார்.


இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகும் முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் வசந்த கரன்னாகொட .

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இன்றைய தினம் அங்கு முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்படவிருந்த நிலையில், கைது செய்யப்படுதை தடுக்குமாறு கோரி தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு, அண்மையில் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டது.

இதனுடன், அவரை கைது செய்வதை தடுத்து உயர் நீதிமன்றம் உத்தரவும் பிறப்பித்துள்ளது.

 

 

 

 

Related posts

காலநிலையில் மாற்றம்

ஶ்ரீ.பொ.முன்னணி கட்சியின் தலைமைத்துவம் மஹிந்தவுக்கு

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தற்போது இணைய சேவை கட்டுப்பாடு விதித்துள்ளது