வகைப்படுத்தப்படாத

முதல் பெண் ஜனாதிபதியாக சுசானா கபுட்டோவா

ஸ்லோவேக்கியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னிறுத்தி பிரசாரம் மேற்கொண்ட சுசானா கபுட்டோவா, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

எவ்வித அரசியல் முன் அனுபவமும் இல்லாத ஜுசானா, தன்னை எதிர்த்து நாட்டின் ஆளும் கட்சி முன்னிறுத்திய வேட்பாளரான மார்ஸ் செஃபோகோவிக்கை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக, இந்த தேர்தல் நன்மைக்கும், தீமைக்கும் இடையிலான போர் என்று அவர் கூறியிருந்தார்.

கடந்த ஆண்டு ஸ்லோவேக்கியாவில் புலனாய்வு பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த தேர்தல் நடைபெற்றது.

 

Related posts

Wheat flour price hiked

டெங்கு நோய் காரணமாக பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!

மகளை சந்திக்க திஸ்ஸவுக்கு அனுமதி