விளையாட்டு

முதல் ஆட்டத்தில் இந்தியா – அவுஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை

(UTV|அவுஸ்திரேலியா) – மகளிர் சர்வதேச இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடர் இன்று(21) அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகிறது. இதன் முதல் ஆட்டத்தில் இந்தியா – அவுஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதில் பங்கேற்கும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ‘A’ பிரிவில் 4 முறை சாம்பியான அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, பங்களாதேஷும், ‘B’ பிரிவில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுக்ள மற்றும் தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

மொத்தம் 6 மைதானங்களில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. தொடக்க நாளான இன்று சிட்னியில் அரங்கேறும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலியாவும், இந்தியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மகளிருக்கான 7 ஆவது இருபதுக்கு – 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவில் இன்று ஆரம்பாகி மார்ச் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

2019 உலகக் கிண்ணத்திற்கான பயிற்சிப் போட்டிக்கான கால அட்டவணை வெளியீடு

சீனா கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் ஒத்திவைப்பு

இலங்கை அணி 372 ஓட்டங்களை பெற்று வெற்றியை தம் வசம் ஆக்குமா?