விளையாட்டு

முதலாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது

(UTVNEWS|COLOMBO) – பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இன்று (27) இடம்பெறவிருந்த முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று கராச்சியில் பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இந்த இரு அணிகளுக்குமான 2வது போட்டி கராச்சியில் நாளை மறுதினம் நடைபெறவிருந்த நிலையில், அது 30 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடர் என்பவற்றில் விளையாடவுள்ளது.

Related posts

முன்னாள் இலங்கை வீரர்கள் மீது குற்றச்சாட்டு

பொதுநலவாய ஒன்றியம் மற்றும் ஆசிய விளையாட்டிற்கு தயாராகும் இலங்கை

நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தானுக்கு வெற்றி