உள்நாடுசூடான செய்திகள் 1

முதலாவது அமர்வில் மூடப்படவுள்ள பொதுமக்கள் பார்வைகூடம்

(UTVகொழும்பு)- இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், அன்றைய தினம் பொதுமக்கள் பார்வைகூடம் திறக்கப்படமாட்டாது என பாராளுமன்ற உதவி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

புதிய சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பொதுமக்களை பாராளுமன்றத்திற்கு அனுமதிப்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், புதிய பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் தற்போது இணையத்தளம் முறைமை ஊடாக தங்களது தகவல்களை வழங்கியுள்ளதாகவும் பாராளுமன்ற உதவி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

Related posts

சிறைச்சாலை ஆணையாளராக துஷார உபுல்தெனிய நியமனம்

ஒப்பந்தங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் புதிய சட்டம்

எல்பிட்டிய தேர்தலை இரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு