விளையாட்டு

முதலாம் நாள் ஆட்ட முடிவின் போது 2 ஓட்டங்களைப் பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி!!

UTV | COLOMBO – இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி நேற்றைய முதலாம் நாள் ஆட்ட முடிவு வரை 2 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 253 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக அதன் தலைவர் தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காது 119 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் சார்பாக  செனன் கெப்ரியல் 5 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

இதேவேளை, இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடி வரும் இந்திய அணி நேற்றைய முதலாம் நாள் ஆட்ட முடிவு வரை 6 விக்கட்டுக்களை இழந்து 347 ஓட்டங்களை பெற்றிருந்தது.

1111\துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக ஷிக்கர் தவான் 107 ஓட்டங்களையும், முரளி விஜய் 105 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர்.

Related posts

ஐபிஎல் தொடரை வைத்து இந்தியாவை வளைக்கும் லண்டன்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக ஜஸ்வர் உமர் நியமனம்

இராணுவத் தளபதியின் அறிக்கை பொய்யானது என அவுஸ்திரேலியா தெரிவிப்பு