உள்நாடு

முச்சக்கர வண்டி எரிபொருள் கோட்டாவில் மாற்றம்

(UTV | கொழும்பு) – முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு (கோட்டா) அடுத்த வாரம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது முச்சக்கரவண்டிக்கு வாரத்திற்கு 5 லீட்டர் வீதம் கோட்டா வழங்கப்படுவதாகவும், அது போதாது என முச்சக்கரவண்டி சாரதிகள் கடந்த வாரம் மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சரிடம் மகஜர் ஒன்றை வழங்கியிருந்தனர்.

மேலும், எதிர்காலத்தில் விலைச்சூத்திரத்தின்படி செயற்படுவதாகவும், இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளுக்கு தற்போது ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளதாகவும், மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதால் மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருளை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், எரிபொருளை இறக்குமதி செய்யவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

களனிவெளி ரயில் சேவைகள் பாதிப்பு

இன்சாபுடன் 600 தடவைகள் தொடர்பு கொண்டவர் வெளியே 6 உள் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டவர் உள்ளே – ரிஷாத்

மின்வெட்டு குறித்து நாளை பரிசீலனை