உள்நாடு

முச்சக்கர வண்டிகளது சேவைகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) – QR முறையின் கீழ் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் முச்சக்கர வண்டி சாரதிகள் தமது வழமையான முச்சக்கர வண்டி வேலைகளுக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல மாதங்களாக முச்சக்கரவண்டி சாரதிகள் எரிபொருள் வரிசையில் தங்கியிருந்ததுடன், இதன் காரணமாக அவர்கள் பயணிகள் போக்குவரத்து சேவையில் இருந்து விலகியிருந்தமை அவதானிக்கப்பட்டது.

முச்சக்கர வண்டிகள் அதிகம் பயன்படுத்தப்படும் கொழும்பை அண்மித்த பகுதிகளிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் கடந்த காலங்களில் ஒரு முச்சக்கரவண்டியைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது.

எவ்வாறாயினும், கோட்டா முறையிலான எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதாலும், ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டதாலும், தற்போது மீண்டும் முச்சக்கர வண்டிகள் வழமை போன்று வர்த்தகத்தில் பிரவேசித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

8 மாவட்டங்களில் 401 கொவிட் தொற்றாளர்கள்

புனித ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளும் இரத்து

சீராகும் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம்