உள்நாடு

முகக்கவசம் அணியாக பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

(UTV | கொழும்பு) – முகக்கவசம் அணியாக பயணிகள் பேரூந்துகளில் ஏறுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என, இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றுவது தொடர்பில் இதுவரை உத்தியோகப்பூர்வமாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என, அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும், பாடசாலை விடுமுறை என்பதால் பயணிகள் எண்ணிக்கை குறைவடையும் எனவும், அதனால் நிலவும் சூழ்நிலையால் அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் இருப்பது சந்தேகமே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

வெள்ளை வேன் ஊடக சந்திப்பு – ராஜித, ரூமிக்கு அழைப்பாணை

இலங்கையின் காப்புறுதி தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை !

60 MPகளை கொல்வதற்கு திட்டம் – அமைச்சர் மனூச