வகைப்படுத்தப்படாத

மீள்சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

(UTV|CANADA) மீள்சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கவுள்ளதாக, கனடா அறிவித்துள்ளது.

மீள்சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு 2021ஆம் ஆண்டின் முற்பகுதிக்குள் தடை விதிக்கவுள்ளதாக, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ (Justin Trudeau) அறிவித்துள்ளார் .

மேற்படி பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புக்கள் உலகளாவிய சவால் எனவும் கனேடிய பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிளாஸ்டிக் பாவனையைக் குறைத்தல் மற்றும் அவை கடலில் சேர்வதைத் தவிர்த்தல் தொடர்பில் சுமார் 180 நாடுகள் கடந்த மாதம் உடன்பாட்டிற்கு வந்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.

இவ்வாறாகக் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைகின்றது.

 

Related posts

678 பேர் எயிட்ஸ் நோயினால் இறப்பு

Wahlberg leads dog tale “Arthur the King”

கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் நாளை